ந.சுப்பையபிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 351, காங்கேசன்துறை வீதி).
xvi, 232 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20.5×14 சமீ.
கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்கு 1957-1960ம் ஆண்டுகளுக்குரிய இலக்கிய பாடமாகிய கம்பராமாயணம்-யுத்தகாண்டம்-கும்பகருணன் வதைப்படலம் 1-170 செய்யுள்களுக்கும் உரை எழுதப்பட்டுள்ளது. இவ்வுரைநூல் பதவுரை, விசேடவுரை, பாடபேதம் இவற்றோடு பிரதான இடங்களில் அந்வயமுங் கருத்துரையுங் கொண்டதாக இயற்றப்பட்டுள்ளது. இடையிடையே தேவைக்கேற்ப வரலாறுகளின் சுருக்கம், அரும்பதவுரை, சொல்நயம், பொருள்நயம், அணிகள், இலக்கணக் குறிப்புகள் என்பன சேர்க்கப்பட்டுமுள்ளன. சிற்சில இடங்களில் பொருள் கொள்ளும் வகையிலுள்ள பேதங்களும் அவற்றுக்குரிய விளக்கமும் காட்டப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் பண்டிதமணி, வித்துவான் ந.சுப்பையபிள்ளை வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராவார்.