ந.சுப்பையபிள்ளை. யாழ்ப்பாணம்: சைவபரிபாலன சபை, 1வது பதிப்பு, புரட்டாதி 1961. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).
ix, 376+80 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 20.5×13.5 சமீ. கம்பராமாயண வரலாறு, கம்பர் வரலாறு, சுந்தரகாண்டம் (அவதாரிகை), காட்சிப்படல விஷயங்கள், காட்சிப்படலம்-மூலமும் உரையும், நிந்தனைப்படல விஷயங்கள், நிந்தனைப்படலம் மூலமும் உரையும் ஆகியவை முதலாவது பிரிவின்கீழ் இடம்பெற்றுள்ளன. புதிய பக்க இலக்கங்களுடன் தொடங்கும் இரண்டாவது பிரிவில், ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியார் வரலாறு முதலாவதாகவும் பின்னர் பாரதியார் பாடல்களின் தொகுப்பும் இடம்பெறுகின்றன. இப்பிரிவில் பாரத தேசம், நடிப்புச் சுதேசிகள், சுதந்திரப் பெருமை, சுதந்திரதேவியின் துதி, புதுமைப்பெண், தொழில், தமிழ்த்தாய், தமிழ், மூன்று காதல், வெண்ணிலா, முரசு ஆகிய 11 பாடல்கள் ந.சுப்பையபிள்ளைஅவர்களின் உரைகளுடன் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12654).