ம.வே.திருஞானசம்பந்த பிள்ளை (உரையாசிரியர்), ச.சபாரத்தின முதலியார் (ஆங்கில மொழிபெயர்ப்பு). யாழ்ப்பாணம்: ம.செல்வத்துரை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, 1921. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
(2), 48 பக்கம், விலை: சதம் 65., அளவு: 19×13 சமீ.
இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும் இந்து சாதன பத்திரிகாசிரியருமான ஸ்ரீ ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளையவர்கள் வகுத்த பதவுரை, கருத்துரை, விசேடவுரை, நூலாசிரியர் வரலாறு என்பவற்றோடு, ஸ்ரீ ச.சபாரத்தின முதலியார் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 358).