புலவர் இளங்கோ (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஜுன் 2003, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (கொழும்பு 12: நிசான் பிறின்ரர்ஸ்).
iv, 98 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ.
க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களின் பாடத் தேவைக்காக அச்சிடப்பட்ட இந்நூலில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி ஆகிய தமிழக எழுத்தாளர்களினதும் இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம் ஆகிய ஈழத்து எழுத்தாளர்களினதும் தேர்ந்த தமிழ்ச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கதாசிரியர் பற்றிய குறிப்புகளும், மாதிரி வினாக்களும் மேலதிகமாகத் தரப்பட்டுள்ளன. இந்நூலில்; 19 அத்தியாயங்களில் இவை தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி ஒரு நோக்கு, புதுமைப்பித்தன் -கவிதை, புதுமைப்பித்தன்-குறிப்பு, ஒரு நாள் கழிந்தது (புதுமைப்பித்தன்), புதுமைப்பித்தன் சிறுகதைகள்-ஒர பார்வை, கு.ப.ராஜகோபாலன் குறிப்பு, கு.ப.ராஜகோபாலன் கதைகள், கனகாம்பரம் (கு.ப.ராஜகோபாலன்), கு.அழகிரிசாமி-குறிப்பு, தவப்பயன் (கு.அழகிரிசாமி), கு.அழகிரிசாமியின் கதைகள், ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி, இலங்கையர்கோன் -குறிப்பு, வெள்ளிப்பாதசரம் (இலங்கையர்கோன்), இலங்கையர்கோன் சிறுகதைகள்-ஒரு நோக்கு, சி.வைத்தியலிங்கம்- குறிப்பு, பாற்கஞ்சி (சி.வைத்தியலிங்கம்), சி.வைத்தியலிங்கத்தின் சிறுகதைகள்-ஒரு பார்வை, மாதிரி வினாக்களும் விடைகளும் ஆகிய தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35956).