ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவபரிபாலன சபை, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
86 பக்கம், விலை: 75 சதம், அளவு: 18×12 சமீ.
புகழேந்தியார் பாடிய சிறுகாப்பியம் நளவெண்பா. இது சொற்சுவை, பொருட்சுவையுடையதாய், நிதிகளை நன்கு புகட்டுவதாய், கற்பனை மலிந்ததாய், எதுகை மோனைகளின் சிறப்பமைந்ததாய், சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் முதலாம் பத்தழகுகள் உடையதாய் விளங்கும் சிறு காப்பியமாகும். நளவெண்பாவின் இறுதிக் காண்டமாகிய கலிநீங்கு காண்டம் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் 1933இல் ஜுனியர் பரீட்சைக்குத் தமிழ்ப்பாடமாக விதிக்கப்பெற்றிருந்த நிலையில், மாணவர்களின் பயன்பாடு கருதி இப்பகுதி பதவுரை, கருத்துரை, விசேடவுரை, நூலாசிரியர் வரலாறு என்பவற்றுடன் அப்பகுதியின் ஆங்கில மொழிபெயர்ப்பினையும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0483).