வில்லிபுத்தூராழ்வார்; (மூலம்). யாழ்ப்பாணம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், சுன்னாகம், 2வது பதிப்பு, 1946. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xii, 168 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 21.5×13.5 சமீ.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசமும் அஞ்ஞாதவாசமும் முடித்தபின் உபப்பிலாவியம் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியைத் துரியோதனனிடம் தூதுசெல்ல விடுத்த பகுதி இதுவாகும். வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தினர் மாணவர் நலன் கருதி இந்நூலுக்கு எளிய உரை எழுதுவித்து வெளியிட்டுள்ளனர். உரையாசிரியர் பெயர் தரப்படவில்லை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 320).