வில்லிபுத்தூராழ்வார்; (மூலம்), ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை, ந.சுப்பையபிள்ளை (உரையாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சி.சபாரத்தினம், ஐயனார் கோவிலடி, வண்ணார்பண்ணை, 8வது பதிப்பு, சித்திரை 1926, முன்னைய பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
iv, 95 பக்கம், விலை: சதம் 75, அளவு: 21×14 சமீ.
வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய மகாபாரதத்தின் சபா பருவத்து, இராசசூயச் சருக்கமே இந்நூலாகும். இது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும் இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியருமான ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை, மேற்படி கல்லூரித் தமிழாசிரியரான வித்துவான் ந.சுப்பையபிள்ளை ஆகிய இருவராலும் எழுதப்பட்ட பதவுரை, விசேடவுரை, நூலாசிரியர் வரலாறு என்பவற்றையும் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 315).