வில்லிபுத்தூராழ்வார்; (மூலம்), சி.கணேசையர் (உரையாசிரியர்). சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, 1939. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xii, 191 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21.5×13.5 சமீ.
மகாபாரதத்தில் துரியோதனனது தூண்டுதலால் சகுனியுடன் தருமபுத்திரன் ஆடிய சூதாட்டத்தைக் கூறும் பாகமே சூதுபோர்ச் சருக்கமாகும். படைகளைக்கொண்டு செய்யும் போரில் வெற்றி தோல்விகளால் இராச்சியத்தைப் பெறுதலும் இழத்தலும் நிகழ்தல்போல, காய்களைக்கொண்டு செய்யும் இச்சூதாட்டத்திலும் வெற்றி தோல்விகள் காரணமாகப் பொருள்களைப் பெறுதலும் இழத்தலும் நேர்வதனால் சூதாட்டத்தைப் போராக உருவகப்படுத்தி ‘சூதுபோர்’ என்று குறிப்பிடப்படுகின்றது. இந்நூலின் மூல நூலாசிரியர் ஸ்ரீ வில்லிபுத்தூராழ்வார், செந்தமிழ்ப்பாரத நூலாசிரியர். 1450-1471 காலகட்டத்தில் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள சனியூரில் பிறந்து வாழ்ந்த வைஷ்ணவ அறிஞர். இந்நூலின் உரையாசிரியர் பிரம்மஸ்ரீ சி.கணேசையர். நூலாசிரியர் வரலாறு, மகாபாரதச் சுருக்கம், சூதுபோர்ச் சருக்கச் சுருக்கம், சூதுபோர்ச் சருக்கம் (செய்யுள்), மேற்படி செய்யுட்களுக்கான உரை என ஐந்து அத்தியாயங்களில் இந்நூலை எழுதியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 322).