11559 கரை எழில் 2013.

மலர்க்குழு. கிளிநொச்சி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கரைச்சி,  1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்).

xx, 258 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளிவரும் பிரதேச மலரின் 2013ஆம் ஆண்டுக்கான இதழ் இதுவாகும். கரைச்சிப் பிரதேசம் பற்றிய ஏராளமான தகவல்களுடனும் அப்பிரதேசத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளின் ஆக்கங்களுடனும் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. மலர்க் குழுவில் கோ.நாகேஸ்வரன், ச.பி.அமல்ராஜ், ப.லுரேந்திரன், கு.றஜீபன், சி.கருணாகரன், சு.பிரசாந்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரணைமடுக் கலாசாரம், வளம்பெருக்கும் வாலிபர்களே, இளைஞர்களைக் கவர்ந்த கனகபுரம் படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம், தண்ணீருக்கான யுத்தம், வன்னிப் பெருநிலப் பிரதேசமும் பல்லினப் பண்பாடும், கிளிநொச்சி மாவட்டத்தின் மீளநிலைப்படுத்தலும் நினைவழியா நிகழ்வுகளும், போரின் பின்னரான சமூக பொருளாதார அபிவிருத்தியும் வடக்கு மக்களின் வாழ்க்கை நிலையும், இணையிலாத் தமிழ், நாகரிகம் மிக்க நாகர்கள் சைவ சமயத்தின்மீது பேரபிமானம் கொண்டவர்கள், தமிழர் பண்பாடு: இருப்பும் சவால்களும், மீண்டும் வாருங்கள் காதுகளில் ஒலிக்கும் பிஞ்சுகளின் அழைப்பு, நிலைபேறான எதிர்காலத்திற்கான சுதேச அறிவு, அக்கராயன் வட்டகை, சமயநெறி உணர்த்தும் வழிபாட்டு முறைகள், சைவசமயச் செல்நெறியில் தலயாத்திரை, தமிழ்மொழியும் இற்றைப்படுத்தலும், 1980களுக்குப் பின் வெளிவந்த ஈழத்துக் கவிதைகளில் இயற்கை, கடவுளின் ரூபம் ஆதாரம் வேதாந்த ரஹஸ்யம், முருகனின் சிறப்புக்களும் வளர்ச்சிப்போக்கும் பற்றிய ஓர் ஆய்வு, சைவசித்தாந்த வளர்ச்சிக்கு ஈழத்தவரின் பங்களிப்பு, வெற்றிகரமான வாழ்க்கை, தென்னம்பிள்ளைக்கு மங்கைப்பருவ மங்கல நீராட்டுவிழா, நவீனமயமாதலும் பண்பாட்டுப் பிறழ்வுகளும், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் நாடக நிலை, எமது உரிமைகளை நாமும் அறிவோம், முயற்சியாளரின் வெற்றிக்கு வித்திடும் சிறந்த நிதிசார் நிபுணத்துவம், மட்டக்களப்பு வடமோடிக்கூத்து ஆடலும் செந்நெறி நடனமும், கரி காசாகும்போது காசு கரியாகிறதே, கரைசேரா படகுகள், வண்ணமலர் வாரி அணைத்து, எதிர்பார்ப்பு, மலைத்தேச கலைச்சொத்து காமன்கூத்து, அரங்கினூடாக சிறுவர்களுக்கான மனோதிடம் மேம்பாடு, வணங்காமுடி வெடியரசனின் பசுத்தீவின் வரலாற்றுக் காவியம் சரித்திர நாடகம், வாய்மை காத்த மன்னன், நட்பின் இலக்கணம், கலியுகத்தில் அமைதியாய் வாழ, தமிழன் சிந்தனைகள், ஸமன் கவிதைகள், கிளையற்று அலையும் பறவையின் பெயர், போன நண்பன், ககனா கவிதைகள், கரைஎழில் விருது நூலில் இடம்பெறும் கலைஞர்கள் பற்றிய சுருக்கமான விபரக்குறிப்பு ஆகிய 43 விடயதானங்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன.

ஏனைய பதிவுகள்