தி.ஞானசேகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xx, 980 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 2000., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-8354-70-4.
06.06.2000 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழ் ஈழத்து/புலம்பெயர் இலக்கியவாதிகளின் நேர்காணல்களின் பெருந்தொகுப்பாக 976 பக்கங்களில் வெளிவந்துள்ளது. தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் படைப்பாளிகளை எவ்வித வேறுபாடுகளுமின்றி அரவணைத்துப் பயணிக்கும் இச்சஞ்சிகையின் 200ஆவது இதழில், ஈழத்தமிழரின் கலை, இலக்கிய வாழ்வியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்.பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா, எம்.ஏ.நுஃமான், செ.யோகநாதன், வ.அ.இராசரத்தினம், அருண் விஜயராணி, கே.எஸ்.சிவகுமாரன், பொன்.பூலோகசிங்கம், கவிஞர் அம்பி, த.கலாமணி, லெ.முருகபூபதி, சி.தில்லைநாதன், வரதர், கே.கணேஷ், சிற்பி, கா.சிவத்தம்பி, நா.சோமகாந்தன், பாலசிங்கம் பிரபாகரன், சித்திரலேகா மௌனகுரு, புதுவை. இரத்தினதுரை, வீ.அரசு (தமிழகப் பேராசிரியர்), ச.பஞ்சாட்சர சர்மா, செங்கை ஆழியான், மா.அனந்தராசன், தெளிவத்தை ஜோசப், துவாரகன், உமா ஸ்ரீதரன், சபா.ஜெயராசா, வீ.தனபாலசிங்கம், மு.பொன்னம்பலம், தெ.மதுசூதனன், தி.ஞானசேகரன், ஷோபா சக்தி, குழந்தை ம.சண்முகலிங்கம், கார்த்திகா கணேசர், முல்லை அமுதன், செ.கணேசலிங்கன், சோ.பத்மநாதன், தெணியான், அ.முத்துலிங்கம், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அகளங்கன், நூலகவியலாளர் என்.செல்வராஜா, அன்னலட்சுமி இராஜதுரை, இளைய அப்துல்லாஹ், கே.ஆர்.டேவிட், வி.ஜீவகுமாரன், அ.சண்முகதாஸ், இரா.உதயணன், துரை மனோகரன், ஆசி.கந்தராஜா, நா.சுப்பிரமணியன், சோ.சந்திரசேகரம் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஞானம் இதழ்களில் முன்னர் பிரசுரமானவை.