தமிழ்மொழித் தின விழாக் குழுவினர். கொழும்பு 2: கொழும்பு வலயக் கல்விக் காரியாலயம், மேல்மாகாணம், 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
vi, 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்களின் ஆசிச் செய்திகளுடனும் பல்வேறு இலக்கிய கவிதை/கதை/கட்டுரைகளுடனும் இம்மலர் தொகுக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் பெண்களின் நிலை: சுவாமி விபுலாநந்தர் நோக்கு (தி.தில்லைநாதன்), தகவல் தொழில்நுட்ப அறிவின் சமூகப் பயன் (சோ.சந்திரசேகரன்), வாழ்;கைக்கு ஏமாப்புத் தருவன (சி.து.இராஜேந்திரம்), ஆழ்வார்களின் பக்தி அனுபவம் (வ.மகேஸ்வரன்), செந்தமிழ் மொழியின் சீரிய பெருமைகள் (கனகசபாபதி நாகேஸ்வரன்), மொழி கற்பித்தலில் இலக்கியத்தின் பங்கு (எஸ்.எம்.ஆர்.சூர்டீன்), நான் விரும்பும் பெரியார் (சு.தினேஸ்குமார்), கீழ்வானில் எழும் பொற்கதிர் (நஸ்பா நிலாப்டீன்), இயற்கையே ஏங்க வைக்காதே (றிவ்னா ஸமான்), மனம் ஊனமில்லை (பா.நிஷாந்தி), ஒழுக்கம் வாழ்வின் முன்னேற்றம் (ஜெ.ஜனகன்), வெற்றி நிச்சயம் (ஜெ.லிண்டா), தமிழ் மொழி வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களின் பங்களிப்பு (சி.செரின் நிரோஜினி), உரிமை கிடைக்கும் வரை ஓயாது (மு.கிருஷ்ணவேணி), வீழ்வேன் என நினைத்தாயோ? (கு.அனுஷா), நவீன தொடர்பு சாதனங்களும் தமிழ் மொழியும் (சி.அகிலேஸ்வரி), சுனாமியே சுந்தர இலங்கையை சிதைத்தனையோ? (தே.விஜேந்தின்), கொழும்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித்தினப் போட்டி முடிவுகள் 2005 ஆகிய கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36471).