மலர்க் குழு. கொழும்பு 5: இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடு, 4/44, பொல்ஹெங்கொட வீதி, 1வது பதிப்பு, மே 1975. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
(10), 126 + 6 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17.5 சமீ.
1975 மே 30, 31ம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின் போது வெளியிடப்பெற்ற சிறப்புமலர் இது. இதில் தலையங்கம், தேசிய ஒருமைப்பாட்டுத் திட்டம், தேசிய இனப்பிரச்சினை (பிரேம்ஜி), எல்லாம் வோட்டாலே (மாவை. நித்தியானந்தன்), சாதிகள் இரண்டே (மருதூர்க் கொத்தன்), குறுக்கே வந்த தெய்வங்கள் (திக்கவல்லை கமால்), அறிவுத்துறை விரிவும் ஆக்க இலக்கிய வாய்ப்பும் (சபா.ஜெயராசா), தேசத்தின் விடுதலைக்கு (மருதூர்க்கனி), இ.மு.எ.சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும் (கா.சிவத்தம்பி), தாத்தாமாரும் பேரர்களும் (எம்.ஏ.நுஃமான்), இலக்கியத்தின் மூலம் ஒருமைப்பாடு (அ.சண்முகதாஸ்), இலக்கியம் காட்டும் தேசிய ஒருமைப்பாடு (க.கைலாசபதி), ஒரு மாலை வகுப்பு நண்பர்கள் (காந்தன்), தேசிய ஒருமைப்பாடு (இ.சிவானந்தன்), விழிப்பு (லெ.முருகபூபதி), வெள்ளைக்கார எகாதிபத்தியத்தை எதிர்த்து (எம்.எ.கிஸார்), மண்ணிலே சொர்க்கம் மலர (மு.சடாட்சரம்), தொழிலாளி வர்க்க கலை இலக்கியம் (நீர்வை பொன்னையன்), ஒரே ஒரு தேசத்தில் (கருணா பெரேரா), புதுமை எழுத்தாளர்களே (அ.இராகவன்), முற்போக்கு எழுத்தாளர்களை எதிர்நோக்கும் பிரச்சினை (H.M.P.முஹிதீன்), மலையகமும் தேசிய இலக்கியமும் (முத்தையன்), இஸ்லாமியத் தமிழ் இலக்கியமும் புறக் கருத்துகளும் (எம்.எம்.உவைஸ்), வாருங்கள் வையகத்தை வென்றெடுப்போம் (பாலமுனை பாறூக்), இ.மு.எ.ச. வரலாறும் சாதனைகளும் (இளங்கீரன்), மரபு பற்றிய மார்க்சிய நிலை (சி.தில்லைநாதன்), வடக்கு மனிதனும் தெற்கு மனிதனும் (மௌனகுரு), லபுமல் சுவந்த நெத்த (S.M.J.பைஸ்தீன்), தேசிய ஒருமைப்பாட்டுக்கான போராட்டத்தில் இ.மு.எ.சங்கம் (என்.சோமகாந்தன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42104).