அந்தனி ஜீவா (இதழாசிரியர்). கண்டி: மத்திய மாகாண கல்வி (தமிழ்) கைத்தொழில் கால்நடை அபிவிருத்தி உணவு வர்த்தகம் வாணிப சுற்றுலாத்துறை இந்துக் கலாசார அமைச்சு, 1வது பதிப்பு, 1995. (கண்டி: ரோயல் ஓப்செட் பிரைவேட் லிமிட்டெட், 190, கொழும்பு வீதி).
(24), 84 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×20.5 சமீ.
மத்திய மாகாணத்தின் கலாசார அமைச்சராக கௌரவ. வீ.புத்திரசிகாமணி அவர்கள் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற தமிழ் சாகித்திய விழாவின்போது எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு விருது, கலை இலக்கிய பணியாளர்களுக்கு விருதும் பொற்கிழியும் என பல்வேறு கௌரவங்களை வழங்கிச் சிறப்பித்திருந்தார்கள். அவ்வேளையில் சாரல்நாடன், சு. முரளிதரன், கலாநிதி துரைமனோகரன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இம்மலரும் வெளியிடப்பட்டது. ஆசியுரை, வாழ்த்துரைகளுடன் விழா நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களும், இலக்கிய ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றிருந்தன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22693).