11568 அக்கினிக் குஞ்சு.

கனிவுமதி. கொழும்பு 5: கனிதா பப்ளிக்கேஷன்ஸ், 81/2, ஹவலொக் வீதி, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8), 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×11.5 சமீ., ISBN: 978-955-7815-03-9.

இந்திய தேசம் கண்ட மிகச்சிறந்த வழிகாட்டியான அப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்ற கூற்று உலக இளைஞர்களுக்கெல்லாம் அவரை ஆத்மார்த்த குருவாக்கியது. அப்துல் கலாமின் பிறந்த தின நினைவாக அவரது அட்டைப் படத்தைத் தாங்கி எளிமையான சொல்லாடல்களை கோர்வையாக்கி, இக்கவிதைத் தொகுதி  வெளியிடப்பட்டுள்ளது. அப்துல் கலாமினால் அவர் காலடியில் பூத்த காளான் நான் என அவர் மீதுள்ள மட்டற்ற மரியாதையை கவிஞர் வெளிப்படுத்துகின்றார். மேலும் புத்தகங்கள் ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டன என்னும் வரியினூடாக அப்துல் கலாமின் வாசிப்பின் மேன்மையை புலப்படுத்துகிறார். நூல் முழுவதும் கலாமின் சிறப்புக்களை எழுத்தோவியமாய் வரைந்துள்ளார் கனிவுமதி. 15.10.2015 அன்று அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிடடு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59803).

ஏனைய பதிவுகள்