மன்னார் அமுதன் (இயற்பெயர்: ஜோசப் அமுதன் டானியல்). மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (மன்னார்: சைபர்சிட்டி அச்சுக் கலையகம்).
76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-53168-1-1.
மன்னார் அமுதன் அல்லது கௌதமன் என்ற புனைபெயரில் அறியப்படும் ஜோசப் அமுதன் டானியல், ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் முதலானவற்றை எழுதி வருகின்றார். இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சின்னக்கடையில், 1984ஆம் ஆண்டில் டானியல் ஜோசப் பிறந்தார். இவர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தொடக்கக் கல்வியைப் பயின்றபின், 1990இல் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று, விருதுநகர் மாவட்டத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். விட்டு விடுதலை காண், அக்குரோணி ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 2011இல், தடாகம் கலை இலக்கிய வட்டம், மன்னார் அமுதனுக்கு அகத்தியர் விருதையும் கலைத்தீபப் பட்டத்தையும் வழங்கியது. பின்னர் கலைமுத்துப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். மன்னார் அமுதனின் அண்மைக்கால கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61157).