ஏ.நஸ்புள்ளாஹ். கிண்ணியா 3: ஏ.நஸ்புள்ளாஹ், செல்லமே பதிப்பகம், பைசல் நகர், 1வது பதிப்பு, நவம்பர் 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
48 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7693-00-2.
கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் கிழக்கிலங்கையில் கிண்ணியாவில் பிறந்தவர். க.பொ.த.உயர்தரக் கல்விகற்ற இவர் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மானி வாசிப்பாளராகக் கடமையாற்றுகிறார். துளியூண்டு புன்னகைத்து (2003), நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம் (2009), கனவுகளுக்கும் மரணம் உண்டு (2011) ஆகிய கவிதைத் தொகுதிகளையும் காவி நரகம் (2013) என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டவர். இவரது ஐந்தாவது நூல் இதுவாகும். ஆதாமின் அப்பிள் கவிதைத் தொகுப்பின்மூலம் இலக்கியச் சூழலுக்கு ஆழ்தள உணர்ச்சிகளை, சுயேச்சையான வளர்ச்சிப் போக்கை சமூக முனைப் பண்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61242).