மேமன்கவி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(13), 14-128 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-955-30-7894-0.
கவிஞர் மேமன்கவியின் மணிவிழாவையொட்டி 29.4.2017 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பெற்ற கவிதைத் தொகுதி இது. கேள்விகளும் இம்சைகளும், முரண்பாடுகள், அகதிகளான பயணத்தில், ஆதிக்குரலும் இன்றைய என் இருப்பும், மனசை அறியும் பொழுதில், பார்ட்டிகள் சொன்ன கதைகள், ஒளியும் ஒலியும், அடிக்கப்போ, இந்த நூற்றாண்டின் கேள்விகள், ஏ.ஜே.என்ற ஆளுமைமிக்க ஆகிருதி, ஒரு தினசரியும் பலசொற்கூட்டமும், ஒரு தேசத்தின் வரலாற்றுப் பிரதியாக, கருவறையும் கல்லறையும் அல்லது இல்லாது போகும் வாழ்வு, பிரார்த்தனை, புனைவெனும் நீர், மதம், இருப்பின் தோல், குடிகாரனின் சிறுநீரைப்போல், டாம் காய்கள், தன்மானக் கணக்கு, நிழலிலும், ஜோர்ஜ் புஷ்ஷ{ம் செக்கடித்தெரு கனகு அக்காவும், இன்றைய, பேச்சொலியின் விசனங்கள், இன்றுசில காட்சிகள், குறிவைத்த போர், கத்தி சொல்ல வேண்டிய கவிதை, இது கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம், முதுகு சொறியும் கம்பு விற்பவனின் விளம்பரப் பாடல், வாசிக்கப்படுகிறேன் வசித்துக்கொண்டு, எதிர்நிலை, வீரியத் துளிகள், ஆதிகளின் புதைகுழிகளிவிருந்து, என் புத்தகம், முகஜாடை, வீழ்வது யாராயினும், ஒற்றுமை, காப்புக்காரனும் கேமெராமேனும், காக்கா கவிதை, கொழும்பு நகர் புறாக்கள் ஆகிய தலைப்புகளில் மேமன்கவி எழுதிப் பிரசுரமான கவிதைகள் இவை.