கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மாநாட்டில் வெளியிடப்பட்ட பல்வேறு நூல்களுள் இக்கவித்திரட்டும் ஒன்று. 1914ஆம் ஆண்டில் முதன்முதலில் சிறு நூலாக வெளிவந்த இந்நூல் 1972இல் இரண்டாம் பதிப்பாக சுன்னாகம்; புலவரக வெளியீடாக வெளிவந்தது. உரைநடையை நவீனத்துவ மாற்றங்களுடன் பயன்படுத்திய நாவலர் செய்யுள்நடையை தமது காலத்து மரபுச்செய்யுட் பாணியிலேயே எவ்வித மாற்றமுமின்றிக் கையாண்டுள்ளார். கடவுள்மீதும், கோவில்கள்மீதும் பாடப்பட்ட செய்யுள்கள், கீர்த்தனைகள் இராகத்தோடு பாடக்கூடியனவாக விளங்குகின்றன. பெரிதும் மானுடரைப் பாடாத நாவலர் தமது குரு சரவணமுத்துப் புலவர் மற்றும் தமது மாணாக்கர் வி. சுப்பிரமணியப்பிள்ளை ஆகியோர் மீது மட்டும் சரமகவிகள் பாடியுள்ளார். இந்நூலிலுள்ள அனைத்துப்பாக்களின் ஊடாகவும் நாவலரின் கவித்துவ உள்ளத்தினைக் காணக்கூடியதாக உள்ளது.