ஏ.எம்.அஸ்கர். அக்கரைப்பற்று: பெருவெளி பதிப்பகம், 31/சீ, உப தபாலக வீதி, பதுர்நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(20), 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-43663-0-5.
வசந்தம் எப்.எம். அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய கவிதைத் தொகுதி இது. நான் கவிஞன், போர் ஓய்ந்த பின்னரான வாழ்வு, நாங்கள் வெற்றி பெறுவோம், சிறு நேரம், இருப்புக்கான அழுகுரல், நினைவுகளைத் தவிர, நான் அழகானவன், பூக்களில் பரவும் தீ, நிலாவின் இருட்டு, நீ மறுக்கும் நான், இந்தக் காலைப் பொழுதும், முகவரியின் விலாசங்கள், புறப்பட்டுப் போகிறோம், உன்னைப் பாடும் என் வரிகள், விடியும் இரவு, இசைக்கும் இயற்கை, மிச்சம், நிஜமில்லா நிழலில், அடம்பிடித்தல், உணர்வுத்துளி, நீ வந்துதான் போனாய், அகதியான காதலியின் விலாசம் தேடி, கலைக்கப்படும் கோலம், வராத பொழுது, காணாமல் போனவர்கள், மீண்டும் போராடுவீர்கள், கூடு கலைந்த குருவி, விட்டுப் போன கவிதை, சுயம் மீதான இரைச்சல், எச்ச சொச்சங்களின் ஈரம், அப்பாவின் சோம்பேறி, உயிரில் பெய்த மழை, கோடு தாண்டுதல் ஆகிய தலைப்புகளில் அமைந்த 33 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்கொண்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61269).