தர்மினி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்).
72 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ.
உண்மையின் பக்கத்திலிக்கும் நல்லதொரு புனைவைப் போல இருளுடனான நீளக் கவிதையாடலை நிகழ்த்திப் பார்க்கிறது தர்மினியின் கவிதைகள். வெளிச்சத்தை எதிர்வாய் கொண்டு போர்புரிவதைத் தவிர்த்து இருளைப் பிரிய மனம் ஒவ்வாத தோழியாய், குழந்தையாய் மற்றுமொரு காதலாய் படிமங்களாய் ஆற்றலாய், புதிய கட்டுமானங்களின் பொறியமைவாய் இயல்பில் எழும் இக்கவிதைகளில் அகம் சார்ந்த முன்னெடுப்புக்கள் இதுவரையிலான தடத்தில் தம் பாதம் பதியாமல் தனக்கான மொழியின் அலகில் பயணத்தை மேற்கொள்கின்றன. (நீலகண்டன்-குறிப்புரையில்).