யூ.எல்.அலியார், பௌஸியா அலியார். சம்மாந்துறை 4: பைத்துல் ஹிக்மாஹ், 28, கீச்சார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (சாய்ந்தமருது: எக்செலென்ட் பிரின்ட்).
(19), 120 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-95831-5-8.
கலாபூஷணம் யூ.எல்.அலியார் எழுதிய 30 கவிதைகளையும், அவரது துணைவியார் கலாபூஷணம் பௌஸியா அலியார் எழுதிய 26 கவிதைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. கலாபூஷணம் பௌஸியா அலியார் அவர்கள் கவிஞர் ஈழமேகம் எம்.ஐ.எல்.பக்கீர்த்தம்பி அவர்களின் மகளாவார். இவற்றில் பல இளையோருக்கான நயம்மிகு கவிதைகளாகும். யூ.எல்.அலியார் எழுதிய கவிதைகள் முந்தை நூற்றாண்டில் முன்னோர் தாயகம், முதற்பணி மறந்ததுமேனோ?, பாராட்டு விழா, வானுயர் அபிவிருத்தி, தீவிரம் காட்டும் தீன்தாரிகள், ஏங்கிச் செத்த ஏழை விவசாயி, நாணயம் இல்லா நாணயங்கள் என இன்னோரன்ன தலைப்புகளில் அமைகின்றன. பௌஸியா அலியார் அவர்கள் எழுதிய கவிதைகள் இளசுகள் உலகம், நவயுக நிகாஹ், வைரவிழாக் கோலம், வேகமேனோ?, நீர்க்குமிழி, பதவி தரும் பாடம் என இன்னோரன்ன தலைப்புகளில் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61551).