நிதர்சனா ஜெகநாதன். லண்டன்: Ratnam Foundation, 179, Norval Road, North Wembley, Middlesex HA0 3SX, 1வது பதிப்பு, சித்திரை 2004. (சென்னை 33: ஜெயபாலு பிரிண்டர்ஸ், எண் 115, கோடம்பாக்கம் ரோடு, மேட்டுப்பாளையம்).
36 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண்ட் 2.50, அளவு: 21×14 சமீ.
இலண்டன் தமிழ் நிலையம் என்ற தமிழ்ப் பள்ளியின் மாணவியான மாணவக் கவிஞர் நிதர்சனா எழுதிய கவிதைகளின் கன்னித் தொகுப்பு இது. 15 வயதேயான இவ்விளம் மாணவி யாழ்ப்பாணம்-கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 2000ஆம் ஆண்டில் பெற்றோருடன் புலம்பெயர்ந்து லண்டன் வந்து சேர்ந்தவர். இளம் நினைவுகள், உறவுகள், நட்பு, நட்பும் நினைவுகளும், தாய், தமிழன், பனித்துளிகள், காதல் கவிதைகள், நான், என் மனம், உறவுகள், நிம்மதி ஆகிய தலைப்புகளில் இவரது கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தாய்மண்ணை விட்டு என்ற கட்டுரையும் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.