வன்னியூர் செந்தூரன். ஒட்டுசுட்டான்: செந்தணல் வெளியீடு, 3வது பதிப்பு, மாசி 2015, 1வது பதிப்பு, சித்திரை 2014, 2வது பதிப்பு, மார்கழி 2014. (வவுனியா: எக்ஸ்சிடோ அச்சகம், இல. 34, மில் வீதி).
66 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 19.5×13.5 சமீ., ISBN: 978-955-41197-0-3.
2013இல் வெளிவந்த ‘நிலவைத் தேடும் வானம்’ கவிதைத் தொகுதிக்குப் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழக மாணவரான சுந்தரமூர்த்தி செந்தூரன் (வன்னியூர் செந்தூரன்) வழங்கும் இரண்டாவது நூல் இது. இக்கவிதைத் தொகுதியில் 29 கவிதைகள் இடம்பெறுகின்றன. பெரும்பாலானவை போரக்கால நினைவுகளை அசைபோட்டாலும் சில கவிதைகள் காதல் நினைவுகளை மீட்டிச் செல்வதாயுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 243988).