வெலிகம ரிம்ஸா முஹம்மத். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2015. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(25), 26-152 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-6388-5.
54 கவிதைகளையும் 7 மெல்லிசைப் பாடல்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இலக்கிய ரசனைக்குள்ளும் ஆன்மீக வரையறைக்குள்ளும் யதார்த்தத்தின் வீச்சோடு நகர்கிறது எரிந்த சிறகுகள் கவிதைத் தொகுதி. சமூக அவலங்களை நுண்ணிய திறனாய்வோடு பேசும் வல்லமையில் இக்கவிஞர்; வெற்றிகண்டுள்ளார். எம்மத்தியில் எரிக்கப்படாமல் படர்ந்திருக்கும் வாழ்வியல் வன்முறைகள், தாழ்நிலை சம்பிரதாயங்கள், சால்பற்ற சடங்குகள், பாழ்படுத்தும் முகமூடிகள் என்பவற்றை நேரிய நோக்கோடு கவிதை வரிகளாகக் கோர்த்து இலக்கிய நெஞ்சங்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார். பொசுக்கப்பட்ட மனித உணர்வுகளின் ஓசைகள், ஓலங்கள், பெண்ணியத்திற்கெதிரான அத்துமீறல்கள், மனித உரிமை துஷ்பிரயோகங்கள், தேச ஐக்கியத்தை சீர்குலைக்கும் குரோதங்கள் என்ற விடயப் பரப்பில் கவிதைகள் விரிகின்றன. புதுமையின் வாண்மையோடும், புரட்சியின் பெருமையோடும் படைப்பிலக்கியத்துக்கு பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார் ரிம்சா. இவரது 12 ஆவது நூலான எரிந்த சிறகுகள் கவிதைத் துறையில் அவருக்குள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை மேன்மைப்படுத்தியுள்ளது. தொலைந்த கவிதை, ஒப்பனைகள், சாதல் நன்றே, சொல்ல மறந்த சேதிகள், கறைகள், தொடரும் தொல்லை, வஞ்சகம், ஓலைக் குடிசையும் பாதி நிலவும், மனிதமில்லா மனிதன், காலத்தின் ஓலம், இறையோன் தந்த மாதம் போன்ற கவிதைகளில் சமூகத்திற்குகந்த அறிவுரைகளும் ஆன்மீக செய்திகளும் கூறப்பட்டுள்ளன. ஆயுள் கைதி, எதிரொலி, விளையும் நினைவுகள் போன்றவை காதலைப் பேசும் கவிதைகள்.