11590 என் கவிதைக்கு மனசென்று பெயர்.

முபஷ்ஷிரா நௌபர். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே).

xxii, 71 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1779-71-9.

உடதலவின்ன, செல்வி முபஷ்ஷிரா நௌபர் எழுதிய கவிதை நூல். சர்வதேச உம்மத் மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினை  மட்டுமல்லாது வறுமை, சமூக உணர்வு, மார்க்கப்பற்று என்று விரிகின்ற முபஷ்ஷிராவின் பார்வை அதிலிருந்து விடுபட்டு இயற்கையை ரசித்து அதனை வர்ணிக்கும் ஆற்றல்களுடன் இக்கவிதைகளில் மலர்ந்துள்ளது. சிறு நூலான போதிலும் வாசகரின் அவதானத்தை சிக்கென ஈர்க்கும் பல சிந்தனைகளைக் கொண்ட கவிதைகளால் இந்நூல் பொருநூலாக மனதில் இடம்கொள்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61646).

ஏனைய பதிவுகள்