ஈழக் கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம். நவாஷ்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
x, 102 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-36-7.
80களில் இருந்து ஈழக்கவி என்ற பெயரில் கவிதைகள் எழுதிவரும் ஏ.எச்.எம். நவாஷ் அவர்களின் 50 கவிதைகளைத் தாங்கிய இரண்டாவது கவிதைத் தொகுதியாக ஏவாளின் புன்னகை அமைந்துள்ளது. உம்மா இல்லாத இருப்பில், என்ற கவிதை முதல், புன்னகையும் வலியும் ஈறாக இவரது ஐம்பது கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவரது கவிதைகள் பலவற்றில் கந்தகம் மணக்கின்றது. இன்னும் சில கவிதைகள் இனவாதம் பற்றிப் பேசுகின்றன. சில கவிதைகள் அசிங்கமான அரசியல் கூத்தாடிகளின் அரிதாரத்தை அழித்துத் துடைக்க முனைகின்றன. இலங்கை பதுளை மாவாட்டம் வெலிமடை பிரதேசத்தில் 10.06.1964இல் பிறந்த ஈழக்கவி நவாஷ், பேராதனைப் பல்கலைக்கழகம், மெய்யியல் துறை சிறப்பு பட்டதாரி ஆவார். இப்பட்டத்திற்கு மார்க்சிய மெய்யியலில் அழகியல் கோட்பாடு (Theory of Aesthetics in the Philosophy of Marxism) எனும் தலைப்பில் ஆய்வு செய்தவர். இவரது கல்வித் தகைமைகளும் மிக நுட்பமான அனுபவங்களும் கூர்மையான சமூகப் பார்வையும் இந்நூலிலுள்ள கவிதைகளுக்கு மெருகூட்டுகின்றன. ஏவாளின் புன்னகை, ஜீவநதி வெளியீட்டு வipசையில் 53ஆவது நூலாகும்.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 247698).