த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்).
vi, 34 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 20×14 சமீ.
ஜீவநதி ஆசிரியர் பரணிதரனின் தந்தையார்- த.கலாநிதியின் ஐந்தாவது நூல் இது. போரின் அவலங்களை சர்வதேசத் தளத்தில் நின்று பார்க்கும் பன்னிரு கவிதைகளைக் கொண்ட இந்நூலில் ஐந்து கவிதைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளாகும். புதுக்கவிதை, மரபுக்கவிதை, குறும்பா எனப் பலவடிவங்களில் இக்கவிதைகள் அமைகின்றன. வர்க்கத்தின் ஓலம் என்ற கவிதை-உழைத்து உருக்குலைந்த தொழிலாளர்கள் பற்றியது. வியப்பூட்டும் செயலென்ன என்ற கவிதை விஞ்ஞான அறிவியல் கவிதையாகும். இது ஜீவநதியின் 26ஆவது நூல்வெளியீடாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 4742).