வே.புவிராஜ். யாழ்ப்பாணம்: கைதடி கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம், கைதடி மேற்கு, கைதடி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், பருத்தித்துறை வீதி, நல்லூர்).
xvi, 152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×11.5 சமீ.
கவிஞர் புவிராஜின் கவிதைகள் எழுச்சிக்கு வித்திடுபவை. ஆனந்தமளித்து முழக்கமிடுபவை. மின்னல், இடி, முழக்கம் தரும் உணர்வினைத் தன் கவிதைகளில் காணவைக்கிறார். மற்றவர் பாடமறந்தவை இவரது பார்வைக்குள் சிக்கிக் கவிதைகளாகின்றன. கவிஞரின் அப்பழுக்கற்ற உணர்வின் வெளிப்பாட்டையும் எழுச்சியையும் கவிதை வரிகளுக்குள் காணமுடிகின்றது. தனதான ஊர், மொழி, இழப்புகள் எனப் பலவற்றையும் விரியம் மிக்க கற்பனை வளத்துடன் பாடுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 244346).