நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ். கண்டி: தடாகம் கலை இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, நவம்பர் 2015. (கண்டி: சி.வி.பப்ளிஷர்ஸ்).
xiv, 84 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-42674-0-4.
உயிர்முதல் என்ற கவிதை தொடங்கி சின்னச் சிதறல்கள் ஈறாகத் தனது 66 கவிதைகளை இந்நூலில் இக்கவிஞர் தொகுத்திருக்கிறார். இடையில் கோபக்காரர்கள், காலாவதித் தேதி, கறுப்பி நீ, காதலர்கள், முள்ளிவாய்க்கால், பொறாமை, திரும்பி வாங்கப்பா, கவிஞர்கள், விவசாயி, அநீதிக் கொலை, தர்மம், ஏழை வீட்டு விவகாரம், கடைக்கண் பார்வை, ஊனம், கண் தானம், புன்னகை, பூக்கள், பாலைவனக் கண்ணீர், யாரிவர்கள், நினைவின் சேமிப்பு, ஆசிரியப் பெருந்தகைகள், தவம், சீதனம், இரட்டை, கிராமக்காதல், தூரத்தில் ஓர் கண்ணீர்த்துளி, மீண்டும் மீண்டும், என் நீ, கற்றுத்தா எனப் பல்வேறு தலைப்புகளில் இவரது கவிதைகள் விரிகின்றன. என் கலைப்பயணப் பங்காளர்கள், முகநூல் நட்போடு ஆகிய பதிவுகள் இறுதியில் அமைகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61241).