கா.வேல்நாயகம். காரைதீவு 05 (கிழக்கு மாகாணம்): கா.வேல்நாயகம், ஓய்வுபெற்ற தலைமைத் தமிழாசிரியன், இராஜஸ்தான், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை).
(4), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
கண்ணகியின் அறக் கற்பின் பெருமையையும் கண்ணகி வழிபாட்டின் சிறப்பையும் நுணுகி ஆராய்ந்து அந்த ஆராய்ச்சியின் பயனாய்க் கிடைத்த தத்துவக் கருத்துக்களை வெண்பாவாக இந்நூலில் வழங்கியுள்ளார். கோவலன் பிறப்பு, பாலப்பருவம் பத்து, கண்ணகி பிறப்பு- பார்வதி பரமனிடம் கூறியது, பரமேஸ்வரன் பார்பதிக்குக் கூறியது, மாங்கனி மதுரையை அடைதல், பாண்டியன் மாங்கனி பறித்தது, மீகாமன் கதை, வெடியரசன் கதை, மீகாமன் கூற்று, நீலகேசி துயர், மணி வாங்கிய கதை, வீரநாராயணன் கதை, விளங்குதேவன் கதை, மாணாக்கன் மண முகூர்த்தம் நிச்சயித்தது, மண மங்கலம், மாதவி பிறப்பு, மாதவி வனப்பு, மாதவி அரங்கேற்றம், மாதவியும் கோவலனும், பொன்னுக்கு மறித்தது, கோவலன் மாதவி பிரிவு, மாதவி இரங்கல், சித்திராபதி மகளைத் தேற்றல், மகள் தாயை நோதல், சூரியாஸ்தனம், மாறன் கணை, சூரியோதயம், வசந்தமாலை தூது, வசந்தமாலை கூற்று, கணவன் கண்ணகியை அடைதல், கோவலன் கூறல், கண்ணகி கூறல், மதுரைக்குச் செல்லல், சிலம்பு விற்கச் செல்லுதல், சிலம்பு விலை கூறல், வஞ்சிப்பத்தன் வந்தெதிர்ப்படல், கோவலன் கொலைப்படல், வீரபத்தினியாய் வீதியில் கண்ணகி, வாயிற்காவலர் மன்னனை விழித்தல், மன்னவன் கூற்று, கண்ணகி கூற்று, மன்னன் மடிதல், கண்ணகி சினம், மதுரை எரிதல், அக்கினி கண்ணகியைப் பணிந்தது, கண்ணகி கட்டளை ஆகிய தலைப்புகளில் வெண்பாக்கள் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17043).