மொழிவாணன். கொழும்பு 13: ஜனனி பப்ளிக்கேஷன்ஸ், 104/36, சங்கமித்த மாவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
x, 86 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.
1966ஆம் ஆண்டில் வீரகேசரி நிறுவனத்தின் ஜோதி வார இதழில் மார்த்தாண்டன் என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை எழுதியதன்மூலம் இலக்கிய உலகில் காலடி பதித்தவர் மொழிவாணன். தொடர்ந்து மித்திரன் வார மலரிலும் இவரது மர்மக் கதைகள் பல வெளிவரலாயின. இவரது யாருக்காக என்ற நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. ‘நவரசம்” என்ற வீடியோ சஞ்சிகையையும், முக்கியஸ்தர்களின் முகவரிகள் என்ற தொகுப்பினையும் முன்னோடியாக வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சிக்காக இவர் 13 நாடகங்கள் வரை எழுதியிருக்கிறார். ‘நான் உன்னைத் தேடுகிறேன்’ என்ற தொடர் நாடகம் இலங்கை வானொலியில் 1986இல் 18 வாரங்கள் தொடராக இடம்பெற்றது. ஜனனி வெளியீட்டகத்தின் மாதமிருமுறை வெளியீடான ப்ரியா என்ற சஞ்சிகையில் வாசகர்களின் கேள்விகளுக்கு கவிதைரூபத்தில் பதில் அளித்துவந்த கவிதாசன் (மொழிவாணன்) இக் கேள்வி-பதில்களைத் தொகுத்து தனி நூலாக்கியிருக்கிறார். மாhதிரிக்கு ஒரு கேள்வி-பதில் இவ்வாறு அமைகின்றது. ‘காவேரிக் கரையிருக்கு/கரைமேலே பெண் இருக்கு?’ என்ற கேள்வியை பாணந்துறை நஷ்யத் பளீல் கேட்க கவிவாணன் பதிலாக ‘விரும்பிச் சென்றால் சுகம் இருக்கு/திரும்பி வந்ததும் எயிட்ஸ் இருக்கு’ என்று முடிக்கிறார் மொழிவாணன். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24656).