சந்தனா நல்லலிங்கம். கொழும்பு 3: சந்தனா, 55, டீன்ஸ்ரன் பிளேஸ், 1வது பதிப்பு, 1999. (சென்னை 600005: Fonts DTP Services, 243, 1st Floor, T.H.Road, Triplicane).
144 பக்கம், தகடுகள், விலை: இந்திய ரூபா 100., அளவு: 17.5×12 சமீ.
சந்தனா நல்லலிங்கம், மட்டக்களப்பு, கோட்டைமுனையைச் சேர்ந்தவர். கொழும்பு பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றுகின்றார். இந்நூலில் இவர் இயற்றிய பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், நடனப் பாடல்கள், கதை-நடனப் பாடல்கள் என 41 பாடல்கள் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. இறுதியாக பக்கம் 83 முதல் 144 வரை தெய்வப் பாடல்கள் என்ற பிரிவில் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடப்பெற்றுள்ளது. இதனை காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், அமுதூட்டற் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றில் சிதைத்தல் பருவம், சிறுதேர் உருட்டற் பருவம், உடையவாள் செறித்தற் பருவம் என ஒழுங்குபடுத்தித் தந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23587).