11602 கவிதைக் கன்னி (யாழ்ப்பாணன் கவிதைகள்)

வே.சிவக்கொழுந்து  (புனைப்பெயர்: யாழ்ப்பாணன்). பருத்தித்துறை: கலாபவனம், மேலைப் புலோலி, 1வது பதிப்பு, சித்திரை 1952. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்).

xvi, 136 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18.5×12.5 சமீ.

நாமக்கல் கவிஞரின் முன்னுரை, இராஜாஜி, கி.வா.ஜகந்நாதன் முதலியோரின் அணிந்துரைகள், கல்கியின் விமர்சனம், க. கணபதிப்பிள்ளை (தமிழகத்தில் ஓர் புத்தொளி),  பண்டிதர் பொன்.கிருஷ்ணன் (கவி ஓவியங்கள்), தி.ச.வரதராசன் (கவியும் கவிதையும்) ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகள் என்பன இக்கவிதைத் தொகுதிக்கு அணிசேர்த்துள்ளன. மேற்கூறியவற்றுடன் சரஸ்வதி வணக்கம், கவிதைக் கன்னி, அந்த நாள் வாராதோ?, சூரியோதயம், நமது நாடு, இலங்கை வனக் காட்சிகள், முகில், உழவுப் பாட்டு, இயற்கையும் தனிமையும், சக்தியின் இருப்பிடம், சுதந்திர வேட்கை, தேசபந்தன் சபதம்,  பாரத மாதா, பாரதம் இனிது வாழி, பாரத நாடு, எங்கள் நாடு, ஜெயலங்கா, தமிழ் மகள் வருக, அவக்கல்வி, தொழிலாளர் மாண்பு, காசினித் தெய்வங்கள், மரணத் தேவன், மயானம், வேள்விக்கடா, காயம்பட்ட பசு, கடற்கரைக் குடிசை வாயிலில், கள்ளுண்போர் காட்சி, பழைய நோட்டு, வயோதிபன், கண் கண்ட தெய்வம், சோகச் சித்திரங்களும் போதனையும், தந்தை வணக்கமும் ஸ்வசரிதையும், மகாலிங்க சிவம், ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், புத்தர், இயேசுக் கிறிஸ்து, சிவானந்தர், ஜவாகர், ஜவாகர் வாழிய, இராஜாஜி, சுபாஸ் (சந்திர)போஸ், பாரதி, புதுமைப் பெண்அன்பின் திதன், அவளும் நானும், அன்பும் பாசமும், ஜெகத்திலென் தெய்வம், தமிழ்விழா வாழ்த்து, காந்தீயம் வாழி, ஆசிரியர்க்கு வாழ்த்து, அருமை மாணவிக்கு நிருபம், கண்டிவாழ் நண்பருக்கு நிருபம், தில்லை நடராஜன் துதி ஆகிய யாழ்ப்பாணனின் 56 கவிதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. வே.சிவக்கொழுந்து பருத்தித்துறை, வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மாலைக்கு மாலை, முல்லைக்காடு, பாலர் பாடல்கள் மற்றும் கவிதைக் கன்னி என்பன இவரது கவிதை நூல்களாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 543).

ஏனைய பதிவுகள்

13227 சுப்பிரமணிய பராக்கிரமம்.

மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை (மூலம்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, ஓகஸ்ட் 2018, 1வது பதிப்பு, 1922.