நிதானிதாசன் (இயற்பெயர்: இம்தியாஸ் எம். ரசாக்), புரோட்வே-ஹில்மி (இயற்பெயர்: ஏ.சி.ஹில்மி காசிம்). கொழும்பு 14: புரோட்வே-ஹில்மி, இல. 166/6, லேயாட்ஸ் புரோட்வே, 1வது பதிப்பு, பெப்ரவரி 1985. (கொழும்பு: ஸ்ரீலட்சுமி பிரின்டர்ஸ்).
70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
ஈழத்து இளங்கவிஞர் இருவரின் புதுக் கவிதைத் தொகுப்பு. போதனைகள் சோதனைகளாகும் போது, ஊர் விழிக்கிறது, சீதைகளின் வாழ்வில், அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் ஆகிய பிரிவுகளின்கீழ் கவிதைகள் விரிகின்றன. நிதானிதாசன் (கலாநிதி இம்தியாஸ் ஏ.ரஸாக்) 90களில் இலங்கையில் இலக்கியச் செயற்பாட்டில் ஈடுபட்டவர். ‘விடிவு’ என்னும் சிறுசஞ்சிகை நடத்திச் சென்றவர். 90களில் சீனவில் உயர் கல்வி கற்க புலம்பெயர்ந்தவர். தற்பொழுது அமெரிக்கா டெம்பல் பல்கலைக்கழகத்தில் சீன அரசியல் மற்றும் சீன மொழியினை கற்பித்து வருகிறார். கொழும்பு 14, லேயாட்ஸ் புரோட்வேயைச் சேர்ந்த புரோட்வே-ஹில்மி எனப் புனைபெயர்கொண்டவரான கவிஞர் ஏ.சீ.ஹில்மி காசிம் ஜனாப் எம்.டீ.ஏ.காசிம் அவர்களின் மைந்தனாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21647).