அக்கரையூர் மு.றூகா. அக்கரைப்பற்று: அகில இலங்கை இளைஞர் மன்றம், பெரிய பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (சென்னை 600001: தாஜ் பிரஸ்,53, நயினியப்பன் வீதி).
120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12.5 சமீ.
பாட்டிகளுடன் ஒரு பேட்டி, ஜோடி மாற்றம், இன்னொரு யுத்த காண்டம், கவிதை மொட்டுக்கள், பொதுவுடமை ஆகிய ஐந்து பிரிவுகளின்கீழ் இக்கவிஞரின் இருபத்தியொரு புதுக்கவிதைகள் இந்நூலில் மலர்ந்துள்ளன. இவரது கவிதைகள் புயல், புரட்சி, கனல், தீ என்று உணர்வுக் காட்சிகளாக விரிகின்றன. ‘இவ்விளைஞனின் மனக்குழறல்கள் சமுதாயம் பற்றியவை. அந்தச் சுவாலை தரும் இதமான சூட்டில் வெளிவரும் இக்கவிதைகளின் ஆன்ம உயிரின் உள்ளோட்டங்களை உருதுக் கவிஞர் மிர்சா காலிபின் கவிதைகளில் தென்படும் உணர்வு பாவங்களையும், வங்கக் கவிஞன் தாகூரின் கவிதைகள் தரும் உயிரோட்டங்களையும் தரிசிக்கமுடிகின்றது’ என்கிறார் இந்நூலுக்கான அணிந்துரையை வழங்கிய கவிஞர் அ.ஸ.அப்துஸ் ஸமது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11120).