மு.பொன்னம்பலம். தெகிவளை: மு.பொன்னம்பலம், 53/3, ரெம்பள் ரோட், கலுபோவில, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxiv, 272 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-97257-2-5.
இந்நூலில் தமிழ் மக்களின் தேசிய இனப் போராட்டத்தினோடு சம்பந்தப்பட்ட கவிதைகளும் உள்ளன. ‘ஆக்காத்திலிருந்தெழும் ஆண்டாள்’ என்னும் கவிதை, காந்தியப் போராட்டத்தின்மூலம் விடுதலை காண வெளிக்கிட்ட ஒரு கூட்டத்தின் கையாலாகாத் தனத்தை அம்பலப்படுத்துகின்றது. அதே வேளை ‘குந்திசேத்திரத்தின் குரல்’ என்ற கவிதை பழைய தலைமுறையினரின் பொய்மையைக் கண்டு வெகுண்டெழுந்து அதே விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய இளந்தலைமுறையினரின் பலத்தையும் பலவீனத்தையும் விமர்சித்து நிற்கின்றது. எம்.கே.முருகானந்தன், பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோரது மு.பொ.வின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளுடன் தொடங்கும் இந்நூலில் ஒளவையும் ஐன்ஸ்ரீனும், எழுச்சியும் வீழ்ச்சியும், மதிப்பீடு, ஆக்காத்தியிலிருந்தெழும் ஆண்டாள், குந்திஷேத்திரத்தின் குரல், புதுயுக தாட்சாயினி புராணம், துயரி, சொற்கள், பேரியல்பின் சிற்றொலிகள், காலம் என்னும் பேரன்னை, கலை இலக்கியப் புரட்சிப் பிரகடனம், பிரபஞ்சக் கும்மி ஆகிய 12 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.