வ.ஐ.ச.ஜெயபாலன். சென்னை 600041: க்ரியா, புதிய இல. 2, பழைய இல. 25, 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (சென்னை 600017: சுதர்சன் கிராப்பிக்ஸ்).
184 பக்கம், விலை: இந்திய ரூபா 170., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82394-06-8.
இலங்கையிலேயே நெடுந்தீவிலே பிறந்து வன்னிக் கிராமத்திலே வளர்ந்த கவிஞர் ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொருளியல் சிறப்புப் பட்டதாரி ஆவார். பல்கலைக்கழக மாணவனாக இருக்கும் காலத்தில் மாணவர் அவைத் தலைவருக்கான போட்டியிலே வெற்றிபெற்று மாணவர் அவைத் தலைவராகிச் சிறப்பாகப் பணியாற்றியவர். ஜெயபாலனின் கவிதைகள் இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினர் வெளியிட்ட தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும், கவிஞர் வைரமுத்து தொகுத்த ‘எல்லா நதியிலும் என் ஓடம்’ என்னும் கவிதைத் தொகுதியிலும் பிற தொகுப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. ஜெயபாலன் நல்ல கவிஞன் மாத்திரமல்ல சிறந்த ஆய்வாளரும் கூட அவ்வப்போது நல்ல கதைகளும் எழுதியுள்ளார். பல்பரிமான ஆளுமை கொண்ட ஜெயபாலனின் 25 ஆண்டுக்காலக் கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாக குறுந்தொகை வெளிவந்தள்ளது. தமிழகத்தில் 2016 எஸ்ஆர் எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் ‘தமிழ்ப் பேராய விருதுகளில்’ விபுலானந்தர் படைப்பிலக்கிய விருதைக் ‘குறுந்தொகை’ நூலுக்காக வ.ஐ.ச.ஜெயபாலன் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.