ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்ட்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).
xlviii, 974 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 1500., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-8354-66-7.
ஈழத்துத் தமிழறிஞர்கள் சித்திரக் கவிக்கு வழங்கிய பாரிய பங்களிப்பு வெளிக்கொணரப்படாத இன்றைய நிலையில் அத்தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் ஈழத்துப் புலவர்களின் சித்திரக் கவிகளையும், சித்திரக்கவி நூல்களையும் திரட்டித் தந்துள்ளது. ஈழத்துச் சித்திரக்கவி இலக்கியங்களை நிலைநிறுத்துவதற்கான தளத்தையும், அச்சித்திரக்கவிகளில் தாக்கம் செலுத்தும் புறக்காரணிகளையும் உள்வாங்கி சித்திரக்கவியின் ஆணிவேர் பிடித்து, அவற்றின் பருமனை அளந்து, கிளைவரையான வியாபகத்தைக் கண்டு, அதன் வழியாக தமிழில் சித்திரக்கவியின் விரிந்த வரலாற்றையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் சித்திரக் கவிகளுக்கான இலக்கணத்தை விளக்கி, அவ்விலக்கணத்தில் சீரற்ற பகுதிகளைச் சீர்செய்து சித்திரக்கவிகளுக்கான இலக்கண நூலாகவும் இந்நூல் அமைகின்றது. இந்நூல் 80க்கும் மேற்பட்ட சித்திரக்கவி வகைகள் மற்றும் அவற்றுள் உள்ளடங்கும் 60க்கும் மேற்பட்ட உப பிரிவுகளுக்கிடையே விரிவும் தெளிவும் நிறைந்த அறிவுசார் உரையாடலையும் நிகழ்த்துகின்றது. தமிழ்ச் சூழலில் சித்திரக்கவிகளின் வரலாறு, தனித்துவம், அவற்றைப் பாடிய நூற்றுக்கும் மேற்பட்ட புலவர்களின் விபரங்கள், இருநூறுக்கும் மேற்பட்ட அரும்பத விளக்கங்கள், முந்நூறுக்கும் மேற்பட்ட மேற்கோள் பாடல்கள் மற்றும் சித்திரக்கவிக்குரிய பல்வண்ண உருவத்தளப் படங்கள் முதலியவற்றை உள்ளடக்கி, ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக இந்நூல் விரிகின்றது.