11622 சிதறுண்ட காலக் கடிகாரம்.

சித்தாந்தன், சி.ரமேஷ், மருதம் கேதீஸ் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: அமரர் திருமதி தங்கம்மா சரவணை நினைவு வெளியீடு, புலோலி தென்மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (யாழ்ப்பாணம்: அன்ரா டிஜிட்டல் பிரின்டர்ஸ், இல. 356, கஸ்தூரியார் வீதி).

(6), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

24.07.2011 அன்று அமரத்துவம் அடைந்துவிட்ட திருமதி தங்கம்மா சரவணையின் 31ஆம் நாள் நினைவு வெளியீடாக இக்கவிதைத் தொகுப்பு 23.8.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 2000க்குப் பின் எழுந்த கவிதைகள் இவை. இதில் பங்களித்துள்ள கவிஞர்கள் பலரும் 1990களிலிருந்து அல்லது அதற்குப் பின்னர் எழுதத் தொடங்கியவர்கள். இத்தொகுதியிலுள்ள கவிதைகளில் அநேகமானவை  யுத்தத்தின் வலியை, அது ஏற்படுத்தியிருக்கின்ற வடுக்களையே பேசுகின்றன. இன்னும் மனித மனதுகளுக்குள் படர்ந்திருக்கும் மென் உணர்வுகளின் தடங்களையும், கனவுகள், ஏக்கங்களையும் பேசுகின்றன. யுத்தம் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்திருக்கின்றது. மக்களை அலைவுறச் செய்திருக்கின்றது. கடந்த காலம் பற்றிய மீள் வாசிப்புக்கானதொரு எத்தன முயற்சியாகவே இத்தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்