கலாவிஸ்வநாதன். கொழும்பு: ஆர்.யோகராஜன், மலையக கவிஞர் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை)
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
இரத்தினபுரியிலிருந்து ‘குயில்வீணை’ என்ற சிறுகவிதைத் தொகுப்புடன் எழுபதுகளில் இலக்கியத்துறையில் காலடி பதித்தவர் கலாவிஸ்வநாதன். பின்னாளில் மலையகத்தின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவராகத் தன்னை இனம்காட்டிக்கொண்டவர். கவிப்பேரரசு கண்ணதாசன் மன்ற அமைப்பாளராக இலக்கிய உலகில் அறிமமுகமான இவர் வலம்புரி கவிதாவட்டத்தின் மத்தியகுழு உறுப்பினரும் மலையகக் கவிஞர் சங்கத்தினது உறுப்பினராகவும், சப்பிரகமுவ சாகித்திய சம்மேளனத்தினது காப்பாளராகவும் சேவையாற்றுபவர். மலையக அரசியல்வாதியான சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 81ஆவது பிறந்த தினத்தையொட்டி 30.8.1993இல் அவரது புகழ்பாடும் இந்நூல் வெளியிடப்பட்டது. சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்டு 30, 1913 – அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10276).