மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 79, கந்தசாமி கோவில் வீதி).
(6), 7-79 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-41614-6-7.
இலக்கிய உலகில் தனது ஆறாவது நூலாகவும், இரண்டாவது கவிதைத் தொகுப்பாகவும் வழங்கியுள்ள ஆசிரியரின் புதுவகைக் கவிதைத் தொகுதி இது. யதார்த்தமான ஒரு சில விடயங்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் விதமாக மூன்று வரிகளை மட்டும் கொண்ட கவிதைகள் அடங்கிய இத்தொகுதியில் நூற்று எண்பத்து நான்கு கவிதைகள் அடங்கியுள்ளன. பிறந்தநாள் முதல் சராசரி ஆயுட்காலம் ஆகிய அறுபத்தைந்து ஆண்டுகள் வரை அறியாமல் செய்துகொள்ளும் ஒரு சில விடயங்களைச் சிந்தனைக்குரிய கவிதைகளாகத் தந்துள்ளார் ஆசிரியர். சிந்திக்க வைக்கும் சிறு கவிதைகள் அடங்கிய சிறந்த கவிதைத் தொகுதி இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 249457).