11633 தெய்வ தரிசனம்: கவிதைத் தொகுதி.

இராகி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணபிள்ளை). காரைதீவு (கிழக்கு மாகாணம்): இந்து சமய விருத்திச் சங்கம், 1வது பதிப்பு, மார்ச் 2016. (சாய்ந்தமருது: றோயல் அச்சகம்).

iv, 78  பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ.

காரைதீவை வாழ்விடமாகவும், பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும் கொண்ட கவிஞரும் எழுத்தாளருமான ஓய்வுநிலை அதிபர் கலாபூசணம் இராமக்குட்டி கிருஸ்ணபிள்ளை ஒரு கலைப்பட்டதாரி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். இராகியின் முதல் நூல் உறவுகள் என்ற தலைப்பில்  2008இல் வெளியாகியது. 50 ஆண்டுகால இலக்கியப் பரிச்சயம் மிக்க இவரது முதல் சிறுகதை பாண்டியூர் இராகி என்ற புனைபெயரில் சரியா தப்பா என்ற தலைப்பில் 1964இல் சுதந்திரனில் வெளிவந்தது. இந்நூலில் இராகியின் தேர்ந்த 19 பக்திக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவை மனம் கவரும் முருகன், முக்தி தரும் முதல்வன், கண்ணகி வெண்பா, நலம் தரும் நாயகன், வாழ்வும் வீழ்வும், விலை பொகாதே, பொறுமை, சோம்பல், நன்றி, ஆசை, குடிக்காதே, அடக்கம், இறைவன் செயல், கதிரவன், அறிவு, பணம், பசி, அன்னை, நிம்மதி ஆகிய 19 தலைப்புகளில் இந்நூலிலுள்ள கவிதைகள்  எழுதப்பட்டுள்ளன.(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 250632 cc). 

ஏனைய பதிவுகள்