எஸ்.பெருமாள். யாழ்ப்பாணம்: எஸ்.பெருமாள், ஈழநாடு பத்திரிகை முன்னாள் ஆசிரியர், 13A -1/3, A9 வீதி,அரியாலை, 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ அச்சகம், 34, பிரவுண் வீதி).
ix, 65 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×13 சமீ., ISBN: 978-955-7286-00-6.
வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளில் ஆசிரியபீடத்தில் பணியாற்றிய எஸ்.பெருமாள், 50 வருடங்களுக்கு மேல் பத்திரிகைப்பணியில் ஈடுபட்டவர். பின்னர் சில காலம் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன் பத்திரிகையில் பணியாற்றினார். உதயனில் காலக்கிரமத்தில் இவர் எழுதிய கவிதைகள் இந்நூலில் பிரசுரமாகியுள்ளன. 27 தலைப்புக்களில் இத்தொகுப்பிற் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞரின் சமய நம்பிக்கை, சமூக எதிர்பார்ப்பு முதலானவற்றோடு உளவியலும் மொழியியலும் சங்கமித்திருப்பதைப் பல கவிதைகளில் காணமுடிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61517).