த.அஜந்தகுமார். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
xii, 60 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4676-55-8.
புதிய தரிசனம் என்ற சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றும் த.அஜந்தகுமார் முன்னதாக ஒரு சோம்பேறியின் கடல், தனித்துத் தெரியும் திசை, அப்பாவின் சித்திரங்கள், படைப்பின் கதவுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முது தத்துவமாணிப் பட்டதாரி. கரவெட்டி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றுகின்றார். இக்கவிதைத் தொகுதி 23.2.2017 அன்று கரவெட்டிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் குப்பிளான் ஐ. சண்முகன் அவர்களின் தலைமையில் வெளியிட்டுவைக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61488).