கவிஞர் அபூபக்கர் (இயற்பெயர்: A.M.அபூபக்கர்). காத்தான்குடி 2: முனீரா பப்ளிக்கேஷன்ஸ், 86, ஓல்ட் ரோட், 1வது பதிப்பு, அக்டோபர் 1981. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்).
72 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18.5×12.5 சமீ.
கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பு. இக்கவிதைகள் யாவும் நாளைய சமுதாயத்தில் தோன்றப்போகும் மனிதனுக்காக இயற்றப்பட்டவை என்கிறார் இக் கவிஞர். நாளைவரும் மனிதனின் உணர்ச்சிகளைத் தூண்டி அவனை நாளைய உலகின் ஜீவ நாயகனாக ஆக்குவதற்காக எழுதப்பட்டவை. அல்லாஹ் அல்லாஹ், மாண்ட கவி பாடுகிறான், செல்வ மகனே, தாய்நாடு விளங்க, வேட்கை, சவ்லால் இளம்பிறையே, நீ, பெண்ணே, இளைஞரே எழுக, மேற்கின் போக்கு, ஏ மானிடனே, பனித்துளியும் சூரியனும், எல்லாம் உமதே, போராட்டம், தோல்வி, தாய்மை, புதிய இல்லம், மகனே கேள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 18 கவிதைகள் இவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3167).