செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. லண்டன்: லண்டன் தமிழ் இசை மன்றம், 66, Westrow Gardens, Ilford, Essex 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 100 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
கவிஞர் சிறீக்கந்தராசா இந்த நூலில் இருபத்துநான்கு விலங்குகளைப் பேசவைத்திருக்கிறார். லண்டனில் வெளிவந்த வடலி மாத இதழில் 24 இதழ்களில் மாதத்திற்கொன்றாக, சங்க இலக்கியங்களில் சிறப்பித்தும் உவமையாகவும் கூறப்பட்டிருந்த பறவகள், பிராணிகள், மிருகங்கள் போன்றவற்றை இனங்காட்டிப் பேசவைத்துத் தமிழ் இலக்கிய உணர்வினை வாசகரிடையே ஏற்படுத்தும் மரபுக் கவிதைகளை எழுதிவந்திருந்தார். ஆனை சொன்னது, பூனை சொன்னது, மயில் சொன்னது என்றவாறாகத் தலைப்பிட்டு இக்கவிதைகள் வடலி இதழ்களில் இடம்பெற்றிருந்தன. அன்னம், ஆந்தை, ஆமை, ஆனை, எலி, எறும்பு, காகம், குயில், கொக்கு, தேனீ, நத்தை, நண்டு, நரி, நாய், பன்றி, பாம்பு, புலி, பூனை, பேய், மயில், மான், முதலை, முயல், வவ்வால் ஆகியவற்றின் பார்வையில் தத்தமது சங்க இலக்கியத்து உவமைகளையும், விபரிப்புகளையும் லண்டன்வாழ் தமிழருக்கு இலக்கிய நயத்துடன் அக்கவிதைகள் வழங்கியிருந்தன. அவை அனைத்தும் தொகுக்கப்பெற்று இன்று நூலுருவில் விரிந்த வாசகர் பரப்பை நாடிச்சென்றுள்ளது.