எஸ்.எச்.நிஃமத். கொழும்பு 10: இரத்தினம் வெளியீட்டகம், 1வது பதிப்பு, மே 1994. (கொழும்பு 10: இரத்தினம் அச்சகம், 60ஏ, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை).
xii, 68 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 17×12 சமீ.
மன்னார், எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர் எஸ்.எச்.நிஃமத். மன்னாரில் 90களில் இடம்பெயர்ந்த 75000 வடபகுதி முஸ்லீம்களில் இவரும் ஒருவர். தனது இதயக் குமுறலாகவும், வலிநிவாரணியாகவும் இக்கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். இலங்கையின் தேசிய ஒற்றுமை பற்றிய ஆழமான புரிந்துணர்வு கொண்ட சில கவிதைகளில் அழகியல் உணர்வும், ஆர்ப்பாட்டமற்ற அங்கதச் சுவையும் நெக்குருகவைக்கும் கவிவரிகளும் கவிதைகளை மனதில் பதிவுசெய்கின்றன. மன்னார் பிரதேசத்து மக்களின் மனங்களில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகள் மேலும் சில கவிதைகளில் விம்மி வெடித்திருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14505).