முல்லை வீரக்குட்டி. கிழக்கு மாகாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2014. (அக்கரைப்பற்று: சிட்டி பொயின்ட் அச்சகம்).
100 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4628-06-9.
திருக்கோயில் பிரதேசத்தில், தம்பிலுவில் கிராமத்தில் வசிக்கும் கலாபூஷணம் கவிஞர் முல்லை வீரக்குட்டி கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். 32 கவிதைகள் அடங்கிய தொகுதியாக இவரது இந்த முதலாவது நூல் வெளிவந்துள்ளது. கவிதைகளில் பல ஒற்றுமையைச் சீர்செய்யத் தூண்டுவனவாகவும் மனிதநேயம் கொண்டவையாகவும், இனவாதத்தை இடித்துரைப்பதாகவும், உள்ளத்தில் தூய்மை ஒளியை ஏற்றுவனவாகவும் அமைந்துள்ளன. யுத்தகாலப் பகுதியில் நடந்தது எவையென்ற உண்மை எமக்குத் தெரிந்த போதிலும் உயிருக்குப் பயந்தே அதை நாம் மறைக்கிறோம் என்பதை ‘நாங்கள்/உயிர்வாழ்தல்/எனும் ஆசையொன்றால்/உண்மை என்ற வாந்தியை/மீண்டும்/உள்ளே தள்ளினோம்.’ என்ற வரிகளில் வடிக்கும் இக்கவிஞர், போர்க்காலச் சூழலால் உருவத்திலும் மாறிப்போன வன்னி மண்ணை வன்னிமகள் என்ற கவிதையில் வலிமிகுந்த வரிகளில் விபரிக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57577).