அலெக்ஸ் பரந்தாமன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
vi, 70 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-19-0.
இறுதிப் போரின்போது, யுத்தச் சூழலில் வாழ்ந்திருந்த கவிஞர் அலெக்ஸ் பரந்தாமன், போரின் வலிகளை தனக்கேயுரிய பாணியில் கவிதை வரிகளினுடாக வாசகரிடம் கொண்டு சேர்க்கிறார். அவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்படும் காட்சிகள் அனைத்துமே உண்மையான சம்பவங்கள். இறுதி யுத்தத்தின்போது தமிழன் அடைந்த துயரங்களின் ஒரு பகுதியை வெளி உலகத்திற்கு பறைசாற்றி நியாயம் கேட்டு நிற்கின்றது. ஜீவநதியின் வெளியீட்டுத் தொடரில் நாற்பதாவது நூலாக இது வெளிவந்துள்ளது. ‘எம்மைவிட்டுக் கடந்துபோன போரின் உச்சத்துள் நிகழ்ந்த அவல தரிசிப்பில் எனக்குள் எழுந்த மனக்கொதிப்பின் வெளிப்பாடுகளே இத்தொகுப்புக்குள் குந்தியிருக்கும் கவிதைகளாகும்’ என்று தனதுரையில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 249648).