சிலாவத்துறை ஏ.ஆர்.அஸீம். மன்னார்: ஹமீத்-அல் ஹ{சைனி இலக்கிய மன்றம், சிலாவத்துறை, 1வது பதிப்பு, மார்ச் 2000. (கொழும்பு: டொப் பிரிண்ட்ஸ்).
36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 50., அளவு: 21×15 சமீ.
இலங்கை முஸ்லீம் சமூகத்தில் சிறந்த மேடைப்பேச்சாளராக அறியப்பெற்ற சமூகஜோதி எம்.ஏ.ரபீக் அவர்களின் கனிஷ்ட புதல்வரான ஏ.ஆர்.அஸீம் எழுதிய கவிதைத் தொகுதி இது. அல் ஹிதாயா மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவர். ஹமீத் அல் ஹூசைனி கல்லூரியில் இடைநிலை வகுப்பில் கற்றுத்தேர்ந்தவர். 1999ஆம் ஆண்டு றோயல் கல்லூரியால் நடத்தப்பட்ட தமிழ்த்தின விழாவில் இடம்பெற்ற கவிதைப் போட்டியில் மத்திய பிரிவில் முதற்பரிசை வென்றவர். மாணவப் பருவத்திலேயே இக்கவிதைத் தொகுதியை வெளிக்கொண்டுவந்து ஈழத்து இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30221).